91.8 F
Kallakkurichi, IN
September 28, 2022
KallakurichiTirukoilur

மத்திய அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரம் வினியோகம்

திருக்கோவிலூர்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசின் 8 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வினியோக நிகழ்ச்சி திருக்கோவிலூரில் நடைபெற்றது. இதற்கு நகர பா.ஜ.க. தலைவர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் தொழிலதிபர் கார்த்திகேயன், மாவட்ட பொருளாளர் வசந்தன், அரசு தொடர்பு செயலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொதுச் செயலாளர் பத்ரிநாராயணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், கள்ளக்குறிச்சி மாவட்ட பார்வையாளருமான ஏ.ஜி.சம்பத் மத்திய அரசின் 8 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கி பேசினார். இதில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் திருமுருகன் நன்றி கூறினார்.

Related posts

விரைவில் ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேட்டி

pronews

ஆய்வு செய்ய வந்த பல்கலைக்கழக அதிகாரிகளை மாணவர்களுடன் பெற்றோர் திடீர் முற்றுகை

pronews

ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி

pronews

Leave a Comment