75.7 F
Kallakkurichi, IN
December 19, 2022
KallakurichiThiyagadurgam

விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் வேளாண் அதிகாரி தகவல்

தியாகதுருகம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகள், வருகிற ஆடிப்பட்டத்தில் நாற்று விட தங்களது நிலங்களை உழவு செய்து தயார்செய்து வருகிறீர்கள். இந்த பட்டத்திற்குத் தேவையான 135 நாள் வயதுடைய நெல் ரகங்களான மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி 19 டன் மற்றும் பி.பி.டி 5204 ரகம் 6.5 டன் மற்றும் மானாவாரியில் பயிரிடும் கோ-10 கம்பு விதைகள் 2 டன் ஆகியவைகள் தியாகதுருகம் வட்டார வேளாண்மை அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் விதை கிராம திட்டத்தின் கீழ் பொன்னி, பி.பி.டி நெல் மற்றும் கம்பு ஆகிய விதைகளை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இதர இடுபொருட்களான திரவ உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள், மற்றும் தக்கை பூண்டு விதைகள் மானிய விலையில் விற்பனைக்கு தயாராக உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது வட்டார வேளாண்மை அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related posts

சங்கராபுரத்தில் சந்தனக்கூடு ஊர்வலம்

pronews

சங்கராபுரத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விளக்க பிரசாரம்

pronews

உளுந்தூர்பேட்டை பகுதியில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

pronews

Leave a Comment